Thu. Feb 21st, 2019

திருவிடைமருதூர் தாலுக்கா காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார நாள்விழா

14 Views

தஞ்சை: தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. மகேஸ்வரன் அவர்களின் உத்திரவின்படி, திருவிடைமருதூர்  தாலுக்கா  காவல்துறையின் சார்பில்  சாலை பாதுகாப்பு வார நாள்  விழா திருவிடைமருதூரில் உள்ள திருவாடுதுறை ஆதினம் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.     இவ்விழாவில்   திருவிடைமருதூர் காவல்துறை  துணை கண்காணிப்பாளர்  திரு A.T.ராமசந்திரன் அவர்கள் , தலைமையில்   திருவிடைமருதூர்  காவல் நிலைய ஆய்வாளர்  திரு.N. ராஜேந்திரன், மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர். ஞானதேசிகன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவ,மாணவிகளிடம் சாலை விதிமுறைகள் மற்றும் தலைகவச  பாதுகாப்பு அவசியத்தை பற்றிய விழிப்புணர்வு சிறப்புரை ஆற்றினார்கள்.

அதனை தொடர்ந்து திருவிடைமருதூர் கடைத்தெருவில் காவல்துறை சார்பில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் தலைகவசம் பற்றியும், கார் ஓட்டுனர்களிடம் சீட் பெல்ட் அவசியத்தையும் செல் போன் பேசி கொண்டு சாலையில் வாகனத்தில் பயணிப்பது தவறு என்றும், சாலை விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை தொடருங்கள் என்று காவல் துறை சார்பில் வாகன முன் விளக்குகளில் கருப்பு நிற ஸ்டிக்கர்களை ஒட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இதில் சுமார் 15-காவல்துறையினர் கலந்து கொண்டார்கள். இதே போல் நாச்சியார்கோயில் கடைத்தெருவில் நாச்சியார்கோயில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார நாள் விழா ஆய்வாளர் (பொறுப்பு) ரேகாராணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் காவல் துறையினர் பலர் கலந்து கொண்டார்கள்.

 

நமது சிறப்பு  செய்தியாளர்

குடந்தை ப.சரவணன்
தஞ்சை

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!