Thu. Feb 21st, 2019

தனக்கு கிடைத்த அண்ணா பதக்க பரிசு தொகையை அரசு பள்ளிக்கு வழங்கிய காவல் ஆய்வாளர்

16 Views

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாங்கம் அவர்கள் கல்பாக்கம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக 2014ம் ஆண்டு பணியாற்றியபோது மத்திய தொழிற்படை காவலர் சக காவலர் 3 பேரை சுட்டுக் கொலை செய்தார். சுட்டுக் கொலை செய்த அந்த காவலரை ஆய்வாளர் திரு.ராஜாங்கம் அவர்கள் விரைவாக கைது செய்தார்.

மேலும் வழக்குகளை உடனுக்குடன் கண்டுபிடித்து வந்தார். அவரது பணியை பாராட்டி அவருக்கு தமிழக அரசு அண்ணா பதக்கம் மற்றும் பரிசுத் தொகையாக ரூபாய் 10¸000-கான காசோலைகளும் வழங்கப்பட்டது. தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை தான் படித்த பள்ளியான பொன்னேரியை அடுத்த காவனம் அரசினர் நடுநிலைப் பள்ளிக்கு வழங்கினார். இந்த செயலை பொதுமக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!