Sun. Feb 24th, 2019

வேலூர் மாவட்டத்தில் முதன் முறையாக அரக்கோணம் காவல்துறையினருக்கு யோகா வகுப்பு

12 Views

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் முதல் முறையாக காவல்துறையினரின் மனஅழுத்தத்தை போக்கும் வகையில் யோகா வகுப்புகள் அரக்கோணம் சப் டிவிஷனில் நேற்று நடைபெற்றது.

தமிழக காவல்துறையில் சமீப காலங்களில் காவலர் தற்கொலைகளை தடுக்கவும், அதிக பணி சுமையால் மனஅழுத்தத்தில் உள்ள காவலர்களின் மன உளைச்சலை போக்க காவலர் நிறைவாழ்வு பயிற்சி அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில மாதங்களாக வார இறுதி நாட்களில் நடைபெற்று வருகின்றது. மேலும் தமிழக அரசு பல்வேறு ஆலோசனைகள் நடத்தி அதன் பின்னர் காவலர்களுக்கு யோகா பயிற்சி நடத்த முடிவு செய்தது. அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் சப்டிவிஷனில் உள்ள முதல்நிலை காவலர் முதல் டி.எஸ்.பி வரையிலான அனைத்து தரப்பு காவலர்களுக்கும் அரக்கோணம் டி.எஸ்.பி அலுவலகம் அருகே உள்ள உள் அரங்கில் நடைபெற்றது.

இதற்காக ஐ.ஜி திரு.நாகராஜன், டி.ஐ.ஜி திருமதி.வனிதா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார், IPS உத்தரவின்படி டி.எஸ்.பி திரு.துரைப்பாண்டியன் தலைமை வகித்து நடத்தினார்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!