Thu. Feb 21st, 2019

20 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்

15 Views

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வந்த 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.குமரன், உதவி ஆய்வாளர் திரு.சந்திரசேகரன், மாவட்ட சிறப்பு காவலர் திரு.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட காவல்துறையினர் நேற்று வானக சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த சோதனையில் ஆட்டோவில் 6 மூட்டைகளில் 20 கிலோ கஞ்சா பதுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் ஆட்டோவில் வந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். ஆட்டோ ஓட்டிவந்த சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த இஸ்மாயில் பாஷா(54, ரவி(56) மற்றும் லோகராஜ் என்பது தெரிவந்தது. இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது.

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன் மற்றும் திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!