Sat. Feb 23rd, 2019

நடிகை பானுப்பிரியா வீட்டில் நகை திருட்டு, பெண் கைது

10 Views

சென்னை: நடிகை பானுப்பிரியா வீட்டில் நகைத் திருட்டில் தொடரப்பட்ட வழக்கில் ஆந்திரப் பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறியதாவது, தியாகராயநகர் விஜயராகவா சாலையில் உள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசிக்கும் நடிகை பானுப்பிரியா வீட்டில், ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் பெத்தபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி வேலை செய்தார். பானுப்பிரியா வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம், ஐ-பேடு, கேமிரா, இரு விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஆகியவை அண்மையில் திருடப்பட்டது. இதில் அவர் வீட்டில் வேலைசெய்யும் அந்த சிறுமியும், அவரது தாயும் சேர்ந்து அந்த நகையை திருடியிருப்பது பானுப்பிரியா குடும்பத்தினருக்கு தெரியவந்தது.

இதையடுத்து பானுப்பிரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணன், சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் அந்த சிறுமியும், தாயும் தங்க நகை மற்றும் பொருள்களை திருடியது தொடர்பாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அந்த சிறுமியின்h தாயிடம் நேற்று விசாரணை செய்தனர். விசாரணையில் ஆந்திர பெண் திருடியதை அறிந்து கொண்ட காவல்துறையினர் அந்த பெண்ணை கைது செய்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!