Sat. Feb 23rd, 2019

பொன்னேரி நடைபெற்று வரும் குற்றச் செயல்களை தடுப்பது குறித்து வணிகர்களுடன் காவல்துறையினர் ஆலோசனை

17 Views

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் சங்கிலி பறிப்பு , வழிப்பறி , திருட்டு போன்ற குற்றச்செயல்களை தடுப்பது குறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பவன் குமார், IPS தலைமையில் காவல்துறையினர் கருத்து கேட்பு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .

இதில் கலந்துகொண்ட வணிகர்கள் , வங்கி நிறுவன அதிகாரிகள் நகைக்கடை உரிமையாளர்கள் பண்டிகை காலங்களில் போக்குவரத்தை நெறிப்படுத்தவும், இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியை மேற்கொள்ளும் கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் போக்குவரத்து நெறிப்படுத்த காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும், ரோந்து பணிக்காக காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். பின்னர் கட்டாயமாக சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என்றும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.  வணிகர்கள் அளிக்கும் புகாரை ஏற்காமல் அலட்சியம் காட்டும் காவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன் மற்றும் திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!