Thu. Feb 21st, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய பொன்னை காவல் ஆய்வாளர் இலக்குவன், பெற்றோர்கள் பாராட்டு

29 Views

வேலூர் :ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டத்தின் காரணமாக அரசு பள்ளி ஆசிரியர்கள் கடந்த 7 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மனஉளைச்சலில் உள்ளனர். ஆசிரியர்கள் வராததை கண்டித்து வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அடுத்த அம்மூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு நேற்று (28.01.2019) காலை, பள்ளி மாணவர்கள் 60 க்கும் மேற்பட்டோர் இராணிப்பேட்டை- சோளிங்கர் சாலையில் அமர்ந்து பாடப்புத்தகத்தை படித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்மூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 265 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் வகுப்பறைகள் பூட்டப்பட்டிருந்த நிலையில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்த பெற்றோர்கள் ஆத்திரமடைந்து இராணிப்பேட்டை – சோளிங்கர் சாலையில் மாணவர்களை அமர வைத்தனர்.மேலும் பாடங்களின் மீது கொண்ட ஆர்வத்தால் மாணவர்கள் சாலையில் அமர்ந்து பாடப்புத்தகங்களை படித்தவாறு பள்ளியை திறக்ககோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த இராணிப்பேட்டை பொறுப்பு ஆய்வாளர் திரு.இலக்குவன் மற்றும் வட்டாட்சியர் பூமா ஆகியோர் பெற்றோருடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதோடு வகுப்பறை பூட்டுக்களை உடைத்து மாணவர்களை வகுப்பறைக்குள் அழைத்து சென்றனர்.அதோடு மட்டுமல்லாமல் பொன்னை காவல் ஆய்வாளர் திரு.இலக்குவன் மாணவர்களுக்கு திருக்குறள் பாடத்தை நடத்தியது மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்களுக்கு பாடம் நடத்திய காவல் ஆய்வாளர் திரு.இலக்குவன் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!