Thu. Feb 21st, 2019

ரோந்து பணியில் ஈடுபடும் காவலரை கண்காணிக்கும் E-Beat KPM செயலி அறிமுகம்

ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களைக் கண்காணிக்க இ-பீட் (E-Beat KPM) என்ற புதிய செல்லிடப்பேசி செயலியை ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் பொ. நாகராஜன் கடந்த வியாழக்கிழமை அறிமுகம் செய்து வைத்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:
17 Views

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், குற்றங்களைத் தடுக்க மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலைய எல்லைகள், நெடுஞ்சாலைகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மணிமங்கலம், சோமங்கலம், சுங்குவார்சத்திரம் ஆகிய 5 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் ரூ.70 லட்சம் மதிப்பில் முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் கடை வீதிகளில் 54 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் குற்றப் பின்னணி உள்ளவர்களை கண்டறியும் ஃபேஸ் ட்ராக், வாகன எண்ணை பதிவு செய்யும் உயர்ரக தொழில்நுட்பம் கொண்ட கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இவற்றின் செயல்பாட்டை வியாழக்கிழமை ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.நாகராஜ் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தமிழக காவல்துறையினருக்கு உதவும் வகையில் தனியார் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ள இ-பீட் எனப்படும். செல்லிடப்பேசி செயலியை அவர் அறிமுகம் செய்தார்.

அதைத் தொடர்ந்து அவர் பேசியது: தமிழகத்தில் முதன்முறையாக ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களைக் கண்காணிக்க இந்த செயலி பயன்படுத்தப்படவுள்ளது. காவலர்கள் ரோந்து பணியிடங்களுக்கு சரியாக செல்கின்றனரா என்பதை கண்டறியும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. காவலர் இருக்கும் இடத்தை அதிகாரிகள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே கண்காணிக்க இந்த செயலி உதவும். குற்றங்களைத் தவிர்க்க இதுபோன்ற செயலிகள் மிகவும் உபயோகமாக இருக்கும்.

இந்த செயலியை தமிழகம் முழுவதும் பயன்படுத்த பரிந்துரை செய்யப்படும் என்று நாகராஜ் தெரிவித்தார். அதையடுத்து இ-பீட் செயலி உள்ள 15 செல்லிடப்பேசிகளை அவர் காவல் நிலையங்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் மண்டல காவல்துறை துணைத் தலைவர் திருமதி.தேன்மொழி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் திரு.ஹிதிமானி முன்னிலை வகித்தார். ஸ்ரீபெரும்புதூர் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!