Sat. Feb 23rd, 2019

செல்போன் பறிப்பு குற்றவாளியை விரட்டிச் சென்று பிடித்த போக்குவரத்து தலைமைக் காவலரை பாராட்டிய சென்னை பெருநகர காவல் ஆணையர்

23 Views

சென்னை: சென்னை, அண்ணாசாலையை சேர்ந்த முகமது காசிம் என்பவர் 19.01.2019 அன்று காலை 06.45 மணியளவில் அண்ணாசாலை, சிம்சன் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தபோது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் முகமது காசிம் கையில் வைத்திருந்த சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள நோக்கியா செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடினார். பெரியார் சிலை சிக்னல் அருகே பணியிலிருந்த, D-1 திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர் செல்போன் பறிப்பு குற்றவாளியை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தார்,

மேற்படி சம்பவத்தில் விரைவாக செயல்பட்டு D-1 திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல் நிலைய தலைமைக்காவலர் R.கர்ணன் (த.கா.17448) என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 21.01.2019 அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!