Thu. Feb 21st, 2019

கபடி போட்டி முதல் பரிசை வென்ற தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் அணி, எஸ் பி முரளி ரம்பா பாராட்டு

23 Views

தூத்துக்குடி: பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு மாபெரும் மின்னொளி கபடி போட்டி கடந்த 17 – 01 – 2019 மற்றும் 18 – 01 – 2019 ஆகிய இருநாட்கள் செய்துங்கநல்லூர் ஸ்ரீ வரதராஜபெருமாள் கோவில் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட இளைஞர்கள் அடங்கிய 60 குழுக்கள் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடித்தனர்.

வெற்றி பெற்ற காவலர்கள் முதல் பரிசு ரூபாய் 20 ஆயிரத்தையும் அதற்கான சுழற்கோப்பையும் பெற்றனர். வெற்றிபெற்ற ஆயுதப்படை காவலர்கள் அனைவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.முரளி ரம்பா, IPS பாராட்டினார்.

இந்த நிகழ்வின் போது ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு சகாயஜோஸ், ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் திரு மாரியப்பன், காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உதவி ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் உடன் இருந்தனர்.

வெற்றி பெற்ற காவலர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்களும், வணக்கங்களும் தெரிவித்துக்கொள்கிறோம்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!