Thu. Feb 21st, 2019

வேலூர் அரக்கோணம் காவலர் குடியிருப்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்

35 Views

வேலூர்: வேலூர் அரக்கோணம் காவலர் குடியிருப்பில் காவலர்கள் மற்றும் காவலர் குடும்பங்களை சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்ட காவலர் பொங்கல் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.துரைபாண்டி மற்றும் காவல் ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் ஏற்பாடு செய்தனர். வேலூர் கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆசைதம்பி தலைமை தாங்கினார்.

காலை முதல் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு வேலூர் கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆசைதம்பி, காவல் துணை கண்காணிப்பாளர் திரு.துரைபாண்டி மற்றும் காவல் ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர். அந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் ஒளிபரப்பு ஊடக பிரிவு மாநில தலைவரும், போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபமான திரு.பாபு அவர்கள் நிகழ்ச்சி ஒருகிணைப்பு செய்து கொடுத்தார்.

 

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!