Thu. Feb 21st, 2019

சொத்து தகராறில் குழந்தையை கொலை செய்த வாலிபர் கைது

24 Views

திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த சடையப்பநகர் பகுதியை சேர்ந்தவர் சாமிதாஸ். இவருக்கு லோகநாதன் (வயது 23) என்ற மகனும், சுபாஷினி (21) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. இந்த நிலையில் லோகநாதன் சொத்தை பிரித்து தருமாறு அவரது தந்தையிடம் கேட்டு வந்தார். இதனால் தந்தை -மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக சாமிதாஸ் முசிறியில் உள்ள அவரது மகள் வீட்டில் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று சுபாஷினி வீட்டிற்கு சென்ற லோகநாதன், சொத்து தொடர்பாக அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த லோகநாதன், சுபாஷினியின் 1 1/2 வயது குழந்தையான கொலை செய்யும் நோக்கத்தோடு தூக்கி தரையில் போட்டார்.

இதில் குழந்தை பலத்த காயமடைந்த குழந்தைக்கு முசிறி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பலியானது. இதுகுறித்து சுபாஷினி கொடுத்த புகாரின் பேரில், முசிறி போலீசார் வழக்கு பதிவுசெய்து லோகநாதனை கைது செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!