Sun. Jan 20th, 2019

காவல் நன்நடத்தை சரிபார்ப்பு சேவை: வேலூர் எஸ்.பி. துவக்கி வைத்தார்

14 Views

வேலூர் : காவல் நன்நடத்தை சரிபார்ப்பு சேவை எனும் புதிய இணையவழி சேவையை வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்குமார், IPS புதன்கிழமை துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் காவல் நன்நடத்தை சரிபார்ப்பு சேவை எனும் புதிய இணையவழி சேவை நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் தனிநபர் விவரம் சரிபார்ப்பு, வேலைநிமித்தமான சரிபார்ப்பு, வாடகைதாரரின் விவரம் சரிபார்ப்பு, வீட்டு வேலையாட்கள் விவரம் சரிபார்ப்பு ஆகிய சேவைகளுக்கு என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்நிலையில் இந்த புதிய இணையவழி சேவையை வேலூரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்குமார், IPS புதன்கிழமை தொடங்கி வைத்ததுடன், இருவருக்கு இந்த சேவையின் மூலம் அறிக்கைகளையும் வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காவல் நன்நடத்தை சரிபார்ப்பு சேவையின் முக்கிய நோக்கம் விவரம் சரிபார்க்கப்பட வேண்டிய தனிநபரின் தற்போதைய வீட்டு முகவரி, காவல் துறை வசமுள்ள ஆவணங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் ஏதேனும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்த விவரங்களை சரிபார்ப்பதாகும். தமிழகத்தில் வசிப்பவர்கள் குறித்த விவரங்கள் மட்டுமே இந்த சேவை மூலம் சரிபார்க்கப்படும்.

இந்த இணையவழி சேவை மூலம் பொதுமக்கள் நேரடியாக காவல் நிலையத்துக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. சரிபார்ப்புக்குப் பிறகான அறிக்கைகளையும் இணையதளத்திலிருந்தே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த அறிக்கையிலுள்ள குறியீட்டை பயன்படுத்தி இதன் நம்பகத்தன்மையும் சரிபார்த்துக் கொள்ள முடியும்.

சேவையில் குறைகள் இருந்தாலும் இணையதளம் வழியாகவே புகார் தெரிவிக்கலாம். இந்த சேவையின் மூலம் விவரங்கள் சேகரிக்கப்படும் தனிநபர் நிறுவனத்தின் ஒப்புதல் கடிதம் அடிப்படையிலேயே காவல் நன்நடத்தை சரிபார்ப்பு அறிக்கை அளிக்கப்படும் என்றார்.

 

வேலூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்