Sun. Jan 20th, 2019

காவல்துறை நன்னடத்தை சான்று இனி ஆன்லைன், தூத்துக்குடி எஸ்.பி துவக்கி வைப்பு

14 Views

தூத்துக்குடி: நன்னடத்தை சான்றினை ஆன்லைன் மூலம் பெறும் சேவையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா இ.கா.ப., நேற்று(09.01.19) மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

www.eservices.tnpolice.govt.in என்ற இணையதளத்தின் மூலம் தனி நபர் நன்னடத்தை, வேலை நிமித்தமான சரிபார்ப்பு, வாடகைதாரரின் விபரம் சரிபார்ப்பு, வீட்டில் வேலையாட்கள் விபரம் சரிபார்ப்பு போன்ற நான்கு வகையான சான்றினை பெற முடியும்.

இதற்கு தனி நபர் நன்னடத்தை சான்று வேண்டுமானால் ரூபாய் 500/- தனியார் நிறுவனங்கள் வேலையாட்களுக்கான நன்னடத்தை சான்று பெற ரூபாய்1000/- கட்டணம் செலுத்த வேண்டும்.

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஆன்லைனிலேயே செலுத்தலாம் , இதன் மூலம் இனி பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கு அலைய வேண்டியதில்லை

நன்னடத்தை சான்றிதழை விண்ணப்பித்த ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம்
என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்