Sun. Jan 20th, 2019

ரிவார்டு வாங்கிய அரக்கோணம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்

17 Views

வேலூர்: வேலூரில் டிஐஜி நடத்திய போலீஸ் வாகன ஆய்வில், அரக்கோணம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் வாகனம் சிறந்ததாகவும், நேர்த்தியாக உடை அணிவதற்காகவும் தேர்வு செய்யப்பட்டு பண முடிப்பு வழங்கப்பட்டது.

வேலூர் சரக காவல் துணை தலைவர் திருமதி.வனிதா சில நாட்களுக்கு முன்னர் வேலூர் நேதாஜி மைதானத்தில் காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்தார். அப்போது ஜீப், போலீசாருக்கு வழங்கப்பட்ட டூவீலர்கள் என அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இதைதொடந்து அரக்கோணம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மிதிலேஷ் குமாருக்கு வழங்கப்பட்ட டூவீலர், சிறந்த வாகனம் மற்றும் நேர்த்தியாக உடையணிதல் போன்ற காரணங்களுக்காக உதவி ஆய்வாளர் திரு.மிதிலேஷ்குமாருக்கு டிஐஜி வனிதா, காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்குமார் ஆகியோர் ரிவார்டு வழங்கி பாராட்டினர்.

வேலூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்