Sun. Jan 20th, 2019

இளைஞர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற “வெற்றியாளர்களின் வெற்றிப்படிகள்” என்ற நூலை எழுதி வெளியிட்ட – திருச்சி மாநகர காவல் ஆணையர்

31 Views

திருச்சி: திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் திரு. அமல்ராஜ் இ.கா.ப அவர்கள் எழுதிய “வெற்றியாளர்களின் வெற்றிப்படிகள்” என்ற நூலை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு. மணிசங்கர் அவர்கள் 04.01.2019-ம் தேதியன்று வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. வரதராஜலு இ.கா.ப அவர்கள்¸ மாநகராட்சி ஆணையர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாநகர காவல்துறை ஆணையர் அவர்கள் பேசுகையில் வெற்றி என்பது ஒவ்வொருவரின் மனதிலும் எழும் இனம்புரியாத தாகம் முயற்சிக்கும் வெற்றிக்கும் நேரடி தொடர்பு உண்டு. “இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கான அடிப்படை தேவைகள் என்ன என்பது குறித்து இந்நூல் உதவும்” என்று கூறினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்