Sun. Jan 20th, 2019

தேனியில் காவல்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு தடகள போட்டிகள்

17 Views

தேனி: சமூக பாதுகாப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு தேனி மாவட்டம் சார்பாக 05.01.2019ம் தேதியன்று மாவட்ட விளையாட்டு அரங்கில் குழந்தைகள் இல்லங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை மற்றும் சகோதரத்துவம் வளர்க்கும் விதமாக தடகள போட்டிகள் மற்றும் குழு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் மாவட்ட அளவில் 20 குழந்தைகள் இல்லங்களிலிருந்து மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் உற்சாகமாக கலந்து கொண்டனர். இப்போட்டியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் அவர்கள் துவங்கி வைத்து¸ போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்