Sun. Jan 20th, 2019

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.16 லட்சம் மோசடி: தந்தை, மகன் கைது

மதுரை மாவட்டம் சாப்டூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்த அரசு மருத்துவமனை திண்டுக்கல் மாவட்டம் எரியோடைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் சௌந்தரராஜன் (56) மற்றும் அவரது மகனை காவல்துறையினர் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) கைது செய்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:
16 Views

மதுரை: மதுரை பேரையூர் அருகே உள்ள சாப்டூரைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(54). இவரது மகன் அருள், பொறியியல் பட்டம் பெற்று வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில், முத்துராமலிங்கத்துக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றி வருபவருமான சௌந்தரராஜன் (56) அறிமுகமாகியுள்ளார்.

அப்போது, அருளுக்கு சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 16 லட்சத்தை கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முத்துராமலிங்கத்திடமிருந்து சௌந்தரராஜன் பெற்றாராம். இதற்கு, சௌந்தரராஜனின் மகனான தன்ராஜும் உடந்தையாக இருந்துள்ளார். ஆனால், வேலை வாங்கித் தராமல் பணத்தையும் திரும்பத் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

இது குறித்து முத்துராமலிங்கம் அளித்த புகாரின்பேரில், சாப்டூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சுகாதார ஆய்வாளர் சௌந்தர்ராஜன் மற்றும் இவரது மகன் தன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்