Sun. Jan 20th, 2019

உதவி சிறைக் காவலர் தேர்வு: வேலூர் மாவட்டத்தில் 306 பேர் பங்கேற்பு

9 Views

வேலூர் :தமிழகம் முழுவதும் நேற்று உதவி சிறைக் காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் 306 பேர் தேர்வு எழுதினர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் உதவி சிறைக் காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வேலூர் மாவட்டத்திலிருந்து தேர்வை எழுத 576 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்கள் தேர்வு எழுத வேலூர் கலைக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்தத் தேர்வில் கணிதம், வணிகவியல் சார்ந்த 200 கேள்விகள் அடங்கிய வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. மேலும், வினாக்களுக்கான பதில்களை குறியீடு மூலம் தேர்வு செய்து விடையளிக்கும் வகையில் குறியீட்டு விடைத்தாள் வழங்கப்பட்டது. காலை, மதியம் என 2 வேலைகளிலும் நடைபெற்ற இந்தத் தேர்வை 306 பேர் எழுதினர். தேர்வையொட்டி தேர்வு மையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 

வேலூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்