Sun. Jan 20th, 2019

போதை தடுப்பு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினருக்கு காவல் ஆணையர் பாராட்டு

16 Views

சென்னை: சென்னையில் போதை பொருட்கள் விற்பனை செய்த நபர்களை கைது செய்ய உதவிய அடையாறு காவல் துணை ஆணையாளர் தலைமையிலான தனிப்படையினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

சென்னையில் போதை பொருட்களை கடத்தி வரும் நபர்கள் மற்றும் விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து கைது செய்யும்படி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப.,அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், அடையாறு காவல் துணை ஆணையாளர் திரு.சஷாங் சாய்,இ.கா.ப., அவர்கள் தலைமையில் E.ராமசுந்தரம், உதவி ஆய்வாளர், J-10 செம்மஞ்சேரி கா.நி., தலைமைக் காவலர்கள் R.வெங்கடேசன் (த.கா.18442), J-5 சாஸ்திரி நகர் கா.நி., S.சங்கர் (த.கா.32301), J-9 துரைப்பாக்கம் கா.நி., முதல்நிலைக் காவலர்கள் P.பூர்ணகுமார் (மு.நி.கா.47317), J-3 கிண்டி கா.நி., M.சண்முகம் (மு.நி.கா.32729), J-13 தரமணி கா.நி., மற்றும் M.நாகராஜ் (மு.நி.கா.31196), J-12 கானத்தூர் கா.நி.,ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் கடந்த ஆகஸ்ட் மாதம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் தீவிரமாக கண்காணித்தபோது, மாணவர்களை சீரழிக்கும் Synthetic Drug போதை பொருட்களை விற்பனை செய்து வந்த உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த நிக்கில் திவாரி என்பவரை 21.08.2018 அன்று கைது செய்தனர். அவரிடமிருந்து MD, Meth, Ecstasy ஆகிய விலையுயர்ந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மேற்படி தனிப்படையினர் கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் மேற்கொண்ட விசாரணையின் காரணமாக சுமார் 3 மாதங்கள் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போல் கண்காணித்து, போரூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சிலர் போதை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறிந்து உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், T-15 எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 16.12.2018 அன்று அப்பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை செய்து வந்த குமரேசன், அருண் திவாகர் மற்றும் பெங்களூரில் வசித்து வந்த நைஜிரிய நாட்டை சேர்ந்த சுக்குவா சைமன் ஒபின்னா ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து Ecstasy என்ற போதை மாத்திரைகள் சுமார் 480 பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேற்படி சம்பவங்களில் திறம்பட தீவிரமாக கண்காணித்து, போதைப் பொருள் விற்கும் கும்பலை கைது செய்ய உதவிய அடையாறு காவல் துணை ஆணையாளரின் தனிப்படையைச் சேர்ந்த E.ராமசுந்தரம், உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர்கள் R.வெங்கடேசன் (த.கா.18442), S.சங்கர் (த.கா.32301), முதல்நிலைக் காவலர்கள் P.பூர்ணகுமார் (மு.நி.கா.47317), M.சண்முகம் (மு.நி.கா.32727) மற்றும் M.நாகராஜ் (மு.நி.கா.31196) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் நேற்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்