Sun. Jan 20th, 2019

சென்னையில் போலி ஆவணங்கள் தயார் செய்து 1 கோடி ரூபாய் சொத்தை அபகரித்த இருவர் கைது

16 Views

சென்னை: சென்னை, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் வசிக்கும் திரு.மு.ஜெகநாதன் (67) என்பவருக்கு சொந்தமான சென்னை, கொட்டிவாக்கத்தில் உள்ள ரூ.1.கோடி மதிப்புள்ள சுமார் 2065 சதுரடி கொண்ட காலி மனையை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து சிலர் அபகரித்ததாக புகார்தாரர் திரு.மு.ஜெகநாதன் அவர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்தார். அப்புகாரின் அடிப்படையில் சென்னை மத்தியகுற்றப்பிரிவு, நிலஅபகரிப்ப தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன். இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு நிலஅபகரிப்பு தனிப்படை காவல்துறையினர் விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட ஏ. மாணிக்கம் (64), மற்றும் குமரன் (எ) பழனி ஆகிய இருவரை நேற்று (02.01.2019) கைது செய்யப்பட்டு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்