Sun. Jan 20th, 2019

சென்னையில் விதிமுறையை மீறிய 4 காவலர்களை எச்சரித்த கூடுதல் காவல் ஆணையர் திரு. ஆர்.தினகரன்

17 Views

சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரையொட்டி, தலைமைச் செயலகப் பகுதியில் ஏராளமான போலீஸார் புதன்கிழமை பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது பாதுகாப்புப் பணியின்போது அலைபேசியில் 4 காவலர்ககள் பேசிக் கொண்டிருந்தனர். அதனை கண்ட கூடுதல் காவல் ஆணையர் திரு.ஆர்.தினகரன் எச்சரித்தார்.

சென்னையில் பாதுகாப்புப் பணியின்போது காவலர்கள் அலைபேசியை பயன்படுத்தக் கூடாது என அண்மையில் தமிழக டிஜிபி தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் அலைபேசி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.

நேற்று தலைமை செயலக பாதுகாப்புப் பணியை சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் ஆர்.தினகரன் ஆய்வு செய்தார்.அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 4 காவலர்கள் அலைபேசியில் பேசிக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார்.உடனே அவர்கள் நால்வரையும் கூடுதல் ஆணையர் திரு.தினகரன் எச்சரித்தார். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்