Sun. Jan 20th, 2019

புத்தாண்டில் பைக் ரேஸ் செய்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து, பொன்னேரி காவல் ஆய்வாளர் திரு.பால்ராஜ் வேண்டுகோள்

23 Views

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்  காவல் கண்காணிப்பாளர் திருமதி.பொன்னி, IPS உத்தரவின் பேரில், பொன்னேரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பவன்குமார் ரெட்டி, IPS அவர்கள் ஆணைக்கு இணங்க பொன்னேரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.பால்ராஜ் புத்தாண்டு நாளை துவங்க உள்ளதை அடுத்து வாகன ஓட்டிகளுக்கும் அப்பகுதி மக்களுக்கும் அறிக்கை வெளியுட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் பொன்னேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிவாழ் பொதுமக்களுக்கும், வியாபாரிகள் மற்றும் மோட்டார் வாகன ஓட்டிகளுக்கும் புத்தாண்டு 2019 ஐ ஒட்டி பொன்னேரி காவல்துறையினர் சார்பில் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

புத்தாண்டு நாளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்கு உறுதி செய்யும் வகையில் பொன்னேரி பகுதியில் வாகன சோதனையின் போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் பைக் ரேஸ் ஓட்டுபவர்கள், அதிவேகதாகவும் அபாயகரமாகவும் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பொன்னேரி மக்களின் நலன் கருதி பொன்னேரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.பால்ராஜ் இத்தகைய அறிவிப்பை வெளியுட்டுள்ளது பாராட்டுதலுக்குரியது.

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன் மற்றும் திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்