Sun. Jan 20th, 2019

பல்வேறு செயின் பறிப்பு, கன்னக்களவு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 5 பேர் கைது

24 Views

மதுரை: மதுரை மாநகரில் செயின் பறிப்பு, இரு சக்கர வாகன திருட்டு மற்றும் இரவு நேரங்களில் வீடுகளை உடைத்து கன்னக்களவு செய்துவரும் நபர்களை பிடிப்பதற்கு மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. சௌ. டேவிட்சன் தேவாசீர்வாதம், இ.கா.ப அவர்கள் உத்தரவின் படி, காவல் துணை ஆணையர் குற்றப்பிரிவு திருமதி. ஜெயந்தி அவர்கள் மேற்பார்வையில் திலகர்திடல் காவல் உதவி ஆணையர் (குற்றபிரிவு) திரு. மோகன் தம்பிராஜன் அவர்கள் நேரடி கண்காணிப்பில், இந்த வருடத்தில் குற்ற சம்பவங்கள் நடந்த வீடுகளுக்கு அருகில் இருந்த சி.சி.டிவி பதிவுகளை வைத்து திருடிய நபரை தேடி வந்தனர்.

இதனையடுத்து 27.12.2018ம் தேதி அதிகாலை 05.00 மணிக்கு சி2 சுப்பிரமணியபுரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. முருகதாசன் மற்றும் காவலர்கள் அதிகாலை ரோந்து செய்து கண்காணித்த போது பழங்காநத்தம் புதிய பாலத்திற்கு கீழ் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த ரவி என்ற ரவிச்சந்திரன் (42), பாபு ஆறுமுகம் (42), பாண்டியராஜன் என்ற ஒத்தக்கண் பாண்டியராஜன் (38), லெட்சுமணன் என்ற தழும்பு (29), ஆகியோர்களை பிடித்து விசாரித்தனர்.

இப்போது ரவிச்சந்திரன் மீது 9 மாவட்டங்களில் மொத்தம் 83 செயின் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் மற்றவர்கள் அதற்கு உறுதுணையாக இருந்ததாகவும் தெரியவந்தது. மதுரையில் திருட்டு நகை வாங்கி விற்று தொழில் செய்து வரும் சந்தீப், மகாதேவ், பீமாராவ் மோரி ஆகியோரின் ஆலோசனைப்படி, மேற்படி நபர்கள் திட்டம் தீட்டியும் எஸ்.எஸ்.காலனி, சுப்பிரமணியபுரம் ஏரியாக்களில் உள்ள பூட்டிய வீட்டை முதலில் நோட்டமிட்டு, பின்பு பூட்டை உடைத்து தங்க நகைகள், பணம் திருடியும் மற்றும் தனியாக நடந்து சென்ற பெண்களிடம் தங்க செயின்களை பறித்து குற்ற செயல்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதின் பேரில் மேற்படி நான்கு எதிரிகளும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் குற்றவாளிகள் நால்வரின் வாக்குமூலத்தின்படி திருட்டு நகைகளை வாங்கி விற்று தொழில் செய்யும் சந்தீப் (29), என்பவர் கைது செய்யப்பட்டார். இவர்களிடமிருந்து 6 வழக்குகளில் தொடர்புடைய சுமார் 158 பவுன் தங்க நகைகள், திருடிய இரண்டு இரு சக்கர வாகனங்கள், சம்பவத்திற்கு பயன்படுத்திய இரண்டு கத்திகள், எட்டு செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஐவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள திருட்டு நகைகளை வாங்கிவிற்று தொழில் செய்துவரும் மகாதேவ் மற்றும் பீமாராவ் மோரி ஆகிய இருவரையும் தனிப்படையினர் தேடி வருகிறார்கள்.

மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து பொருட்களை மீட்டு துரித நடவடிக்கை எடுத்த தனிப்படையினரை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. சௌ. டேவிட்சன் தேவாசீர்வாதம், இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


திரு.நாராயணமூர்த்தி

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்