Sun. Jan 20th, 2019

பொன்னேரி திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் கனரகவாகனங்கள் செல்ல தடை, ASP திரு.பவன்குமார்,IPS தகவல்

26 Views

பொன்னேரி : திருவெற்றியூர் பொன்னேரி நெடுஞ்சாலை அகலபடுத்தும் பணி நிறைவடைந்த நிலையில் 4 வழிப்பாதை செயல்பட்டு வருகிறது. இந்த சாலையில் நாள்தோறும் நூற்றுக்கனக்கான கனரக வாகனங்கள் பொன்னேரி மீஞ்சூர் வழியாக அதிகமாக செல்கின்றன.

இதனால் இந்த வழி தடத்தில் அடிக்கடி விபத்துகளும் உயிர்சேதங்களும் ஏற்படுகின்றன. இதனை தடுக்க புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் உதவி கண்காணிப்பாளர் திரு.பவன்குமார், IPS கனரக வானங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

தச்சூர் வல்லூர் நெடுஞ்சாலையில் எச்சரிக்கை பலகை வைக்கபட்டுள்ளன.  அருகில் டிராபிக் ஆய்வாளர் செல்வராஜ்

இந்நிலையில் பொன்னேரி காவல்துறை உதவி கண்காணிப்பாளர் திரு.பவன்குமார்ரெட்டி நிருபர்களிடம் பேசுகையில், பொன்னேரி, திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அதனை தடுக்க லாரிகள், டேங்கர்லாரிகள், கண்டெய்னர்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணிமுதல் இரவு 8 மணி வரையும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் புது வருட முதல் இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

 

 

 

 

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன் மற்றும் திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்