Sun. Jan 20th, 2019

ஈரோட்டில் புதிதாக சேர்ந்த 87 ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி

23 Views

ஈரோடு: ஈரோடு ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதான வளாகத்தில் 87 ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி துவங்கியது. பயிற்சிக்குப்பின் அவர்கள் ஈரோடு பெருந்துறை, கோபி, பவானி ஆகிய ஊர்க்காவல் படைப்பிரிவுக்கு அனுப்பப்பட்டு பணியாற்றுவர்.

ஈரோட்டில் 265 ஊர்க்காவல் படையினர் உள்ளனர். பற்றாக்குறை இடங்களுக்கு புதிதாக 24 பெண்கள் உட்பட 87 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஈரோடு ஆணைக்கல்பாளையம் காவலர் ஆயுதப்படை வளாகத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் பயிற்சி துவங்கியது. தினமும் காலை ஒன்றரை மணி நேரம் ஆயுதப்படை வளாகத்தில் 40 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அவர்களுக்கு மாதத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படும். தினமும் 550 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்