Sun. Jan 20th, 2019

விரைவில் கிளாம்பாக்கத்தில் புதிய DSP அலுவலகம்

28 Views

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலுார் புதிய காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் கட்ட கிளாம்பாக்கத்தில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுவாஞ்சேரி பழைய காவல் நிலையத்தில் வண்டலுார் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் தற்போது இயங்கி வருகின்றது

இங்கு இட வசதியில்லாமல் காவல்துறையினர் அவதிப்படுகின்றனர். இதனால் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கித்தர மாவட்ட ஆட்சியரிடம் காவல் கண்காணிப்பாளர் திரு.சந்தோஷ் ஹைதிமாணி பரிந்துரை செய்தார்.

அதைத் தொடர்ந்து கூடுவாஞ்சேரி அடுத்த கிளாம்பாக்கம் கிராமத்தில் 30 சென்ட் நிலத்தை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் கட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் வருவாய்த் துறையினர் ஒப்படைத்தனர். விரைவில் இங்கு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவலர்கள் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்