Sun. Jan 20th, 2019

சாமியாடி குறிசொல்வதுபோல் நடித்து கொள்ளையடிக்கும் நபரை சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறையினர்

33 Views

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி காவல்நிலையத்திற்குட்பட்ட மதுராந்தோட்டத்தெருவைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரது வீட்டின் பீரோவில் வைத்திருந்த பணம் ரூ.7.5 இலட்சம் மற்றும் தங்கநகை 15 சவரன் காணாமல் போயிருப்பதாக காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சந்தோஷ்ஹதிமானி இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் திரு.வாசுதேவன் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தினேஷ் என்பவர் சாமியாடி குறிசொல்லி நோயை குணப்படுத்துவதாகக் கூறி அடிக்கடி அவர்கள் வீட்டிற்கு சென்று பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்ததாக ஒப்புக்கொண்டார். மேலும் அவரை கைது செய்து அவரிடமிருந்து 12.5 சவரன் தங்கநகை மற்றும் பணம் ரூ.5¸88¸000 பறிமுதல் செய்து பின் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்