Sun. Jan 20th, 2019

இரண்டாம்கட்ட காவலர் நிறைவாழ்வு பயிற்சி, காஞ்சிபுரம் SP தலைமை

32 Views

தமிழக காவலர்களுக்கான நிறைவாழ்வு பயிற்சி திட்டமானது தமிழக காவல்துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கும் அவர்களது பணிச்சுமையின் காரணமாக ஏற்படும் மனசோர்வு மற்றும் மன அழுத்தத்தினை போக்கவும், மேலும் அவர்களது பணித்திறனை மிகுதிபடுத்துவதற்காகவும் வடிவமைக்கப்பட்டதாகும்.

இப்பயிற்சி வேலை, குடும்பம் மற்றும் சமுதாய சூழல்களால் காவலர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஏற்படும் மன அழுத்தத்தினை போக்கவும், இனிவரும் காலங்களில் இது போன்ற மன அழுத்தங்கள் ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாட்டினையும் அறிவுறுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.

இந்நிறைவாழ்வு பயிற்சியின் முதற்கட்டமாக தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் மூலம்  தனியாக தேர்ந்தெடுக்கப்பட்டு 5 நாட்கள் பெங்களுரில் பயிற்சி பெற்ற காவல் ஆய்வாளர் திருமதி.P.கீதாலட்சுமி, உதவி ஆய்வாளர்.திருமதி.C.தமிழ்ச்செல்வி, சமூக ஆர்வலர் திருமதி.மைதிலி ஆகியோர் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30.11.18.அன்று காவல்துறை துணை தலைவர் P.C.தேன்மொழி அவர்கள் தலைமையேற்று காஞ்சிபுரம் சமுதாய கூடத்தில் 36 காவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சியினை குத்துவிளகேற்றி துவங்கி வைத்தார்.

இப்பயிற்சியின் முதல் இரண்டு நாள் காவலர்களும் மூன்றாம் நாள் அவர்தம் குடும்பத்தினரும் பங்கேற்று பயன்பெற்றனர்.

தற்போது இரண்டாம் கட்ட பயிற்சி 07.11.18.ம் தேதி முதல் 09.11.18. வரையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சந்தோஷ் ஹதிமானி இ.கா.ப. அவர்கள் குத்துவிளகேற்றி துவங்கி வைத்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்