Sun. Jan 20th, 2019

போலி நகைகளின் மூலம் நகைகடன் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

24 Views

தூத்துக்குடி: தூத்துக்குடி, மட்டக்கடை கனரா வங்கி கிளையில் டிவிசனல் மேலாளர் திரு. இஸ்மாயில் என்பவர் திடீர் ஆய்வு செய்ததில் ரூபாய் 1 கோடியே 15 ஆயிரம் மதிப்பில் சுமார் 22 நபர்களின் பெயரில் 73 போலி தங்க நகைகளுக்கு கடன் வழங்கியது தெரியவந்தது. இம்மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட தங்கநகை மதிப்பிட்டாளர் சண்முகசுந்தரம் என்பவர் தற்பொழுது தலைமறைவாக இருப்பதாகவும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி தூத்துக்குடி வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரினை விரைந்து முடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.முரளி ரம்பா இ.கா.ப. அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.பார்த்திபன் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. துரித நடவடிக்கை மேற்கொண்ட தனிபடையினர் நகை மதிப்பீட்டாளரை 05.12.2018 -ம் தேதியன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

நடத்தப்பட்ட விசாரணையில் தனக்கு தெரிந்த பல்வேறு நபர்களின் பெயரில் ஏமாற்றி வங்கி பணத்தை மோசடி செய்ததை ஒப்புக்கொண்டதையடுத்து அவரிடமிருந்து ரூபாய்.50,15,000/- யை மீட்டனர். இவ்வழக்கில் திறமையாக செயல்பட்டு பணத்தை மீட்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்