மதுரை மாநகரின் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமிராக்கள்

12 Views

மதுரை: மதுரை மாநகரில் குற்றங்கள் நடைபெறுவதை தடுப்பதற்கும், நடைபெற்ற குற்றங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும் மற்றும் களவாடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கும் மதுரை மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறது.

அந்த வகையில் மதுரை மாநகரில் முக்கிய சந்திப்புகளில் CCTV கேமிராக்கள் பொருத்துவது மிகவும் முக்கியமான அம்சமாகும். தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் CCTV கேமிராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதே போன்று மதுரை மாநகரில் உள்ள முக்கிய சந்திப்புகள் அனைத்திலும் மூன்றாவது கண்ணாக கருதப்படும் CCTV கேமிராக்கள் பொருத்தும் பணியினை சிரத்தையுடன் செயல்படுத்த மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.

மதுரை மாநகரில் இதுவரை சுமார் 150 முக்கிய சந்திப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அத்தகைய சந்திப்புகள் ஒவ்வொன்றிலும் நான்கு கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளன. ஒவ்வொரு சந்திப்பிற்கும் CCTV கேமிராக்கள் பொறுத்த ரூபாய்.25,000/- செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் வியாபார பெருமக்களுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கும் பொருட்டு மதுரை மாநகர காவல்துறையுடன் இணைந்து இப்பணியினை செயலாற்றி ஊக்கப்படுத்தும் வகையில் வர்த்தக சங்கங்கள், தொழில் முனைவோர் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் ஆகியோரிடமிருந்து தன்னார்வ நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

எனவே மேற்கண்ட CCTV கேமிராக்கள் பொருத்தும் பணிக்கு நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையரிடம் 0452-2520760 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 94981-80078 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!