கரூர் தாந்தோணிமலையில் புதிய காவல் நிலையம் திறப்பு

12 Views

கரூர்: கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கை சீரிய முறையில் பராமரிக்கும் வகையிலும் குற்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையிலும், பொதுமக்களுக்காக முழுநேர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் வகையிலும் தாந்தோணிமலையில் இந்த காவல்நிலையம் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கரூர்  தாந்தோணிமலையில் அமைக்கப்ட்டுள்ள காவல் நிலையத்தை மாண்புமிகு மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை மற்றும் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.அன்பழகன் அவர்கள் தலைமையில் திருச்சி மத்திய மண்டல காவல்த்துறை தலைவர் திரு.வி.வரதராஜூ மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி ஆர்.லலிதா லஷ்மி ஆகியோர் முன்னிலையில் நேற்று திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் டி.கே.இராஜசேகரன் அவர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.எம்.கும்மராஜா (கரூர் நகரம்) ,திரு.சுகுமார்(குளித்தலை) ,திரு.முத்தமிழ்ச்
செல்வன் (அரவக்குறிச்சி),  திரு.சிற்றரசு(ஆயுதப்படை) , கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர்கள் திரு.பாரதி, திரு.பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாந்தோணிமலை தோரணக்கல்பட்டி , ஆச்சிமங்கலம்,கருப்பம்பாளையம் மற்றும் அப்பிபாளையம் உள்ளிட் 5 தாய் கிராமங்களையும் அவைகளுக்குட்பட்ட 33 குக்கிராமங்களையும் உள்ளடக்கி இந்த காவல்நிலையம் செயல்பட உள்ளது. இரண்டு துணை காவல் ஆய்வாளர்களும் 28 காவலர்களையும் உள்ளடக்கியதாக இந்தக் காவல் நிலையம் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!