இந்திய கடலோரப் படை பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்

10 Views

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை மற்றும் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட மீனவ இளைஞர்களுக்கு இந்திய கடலோர காவல்படை மற்றும் கடற்படை பணிகளில் சேர்வதற்கான சிறப்பு பயிற்சி முகாம் கடந்த 3 மாதமாக சிறந்த முறையில் நடைபெற்றது.

இப்பயிற்சியின் நிறைவு விழா 01.12.2018- ம் தேதியன்று மீன்வளத்துறை பயிற்சி முகாமில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளிரம்பா இ.கா.ப அவர்கள் பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும் பயிற்சி முடித்த இளைஞர்கள் கிராமங்களில் உள்ள மற்ற மாணவர்களையும் ஊக்குவித்து பயனடையச் செய்ய வேண்டுமென்றும் இளம் வயதில் வாழ்க்கை முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுரைகளை வழங்கினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!