விபத்தில் உயிரிழந்த விவசாயியின் 3 குழந்தைகளை தத்தெடுத்த காவல் ஆய்வாளர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மலையடி குறிச்சியை சேர்ந்த விவசாயி கோட்டூர்சாமி, கை செயலிழந்த மனைவி 2 பெண் மற்றும் 1 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்தார் . இவர் கடந்த 29.11.2018-ம் தேதியன்று வேலைக்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது மினி வேன் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். தனது கணவர் இறந்ததால் தனது குடும்பம் வறுமையில் வாடுவதையும் குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது என்றும் தெரியாமல் செல்வி வேதனையில் தவித்து வந்தார்.
இதை அறிந்த புளியங்குடி காவல் ஆய்வாளர் திரு.ஆடிவேல் அவர்கள் அந்த 3 குழந்தைகளுக்கும் உணவு மற்றும் மேல் படிப்பு வரை கல்வி செலவை தான் ஏற்றுக்கொள்வதாக கோட்டூர்சாமியின் மனைவியிடம் தெரிவித்துள்ளார். இவரது செயலை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண்சக்திகுமார் இ.கா.ப அவர்கள் காவல் ஆய்வாளரை தொடர்பு கொண்டு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். இவரின் இத்தகையச் செயலை சமூக வளைதளங்களில் பொதுமக்கள் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.