மத்திய உள்துறை அமைச்சரிடம் பாராட்டு சான்றிதழ் வாங்கிய கோவை பெண் காவலருக்கு மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பாராட்டு

9 Views

கோவை: கோவை மாவட்டம் மகாலிங்கபுரம் காவல்நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் திருமதி.கே.பாலாமணி காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாமல் இறந்த சுமார் 51 நபர்களின் புகைப்படங்களை ஒப்பிட்டு காணாமல் போனவர்களின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்து அடையாளம் காட்டி நிலுவையில் இருந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டுவந்ததுடன்¸ மன நலம் பாதிக்கப்பட்டு காணாமல் போயிருந்த 8 நபர்களை அவர்களின் உறவினர்களுடன் சேர்த்து வைத்துள்ளார். இவரின் பணியினை பாராட்டி Conference on CCTNS – Good Practice and Success Stories என்ற மாநாட்டில் இவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு. திரு. #$ராஜ்நாத் சிங் அவர்கள் பாராட்டி சான்றிதழும் கேடயமும் வழங்கினார்.

மேலும் திருமதி.கே.பாலாமணியினை சிறப்பிக்கும் பொருட்டு 30.11.2018 அன்று மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு.கு.பெரியய்யா¸ இ.கா.ப. அவர்கள் நேரில் அழைத்து பாராட்டுகளையும் பரிசுகளையும் வழங்கி கௌரவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!