பொன்னேரி அருகே குடும்ப தகராறில் மனைவி கொலை, கணவன் கைது

பொன்னேரி அருகே குடும்ப தகராறில் மனைவியை உருட்டு கட்டையால்அடித்து சடலத்தை சாக்கு பையில் கட்டி ஏரியில் வீசிய கணவன் கைது

செய்தியை பகிர்ந்து கொள்ள:
12 Views

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காவல் பட்டி கிராமத்தைச்சேர்ந்தவர் அருள் வாத்துக்களை மேய்க்கும் தொழில்செய்துவரும் இவருக்கு சோனியா (28) மற்றும் சூரியா (25) அக்கா தங்கை இருவைரையும் திருமணம் செய்துக்கொண்டு ஒரே வீட்டில் குடும்ப நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று இரவு குடும்ப தகராறில் இரண்டாவது மனைவியும்குழந்தைகளும் வெளியே சென்ற நிலையில் முதல் மனைவி சோனியாவிற்கும் அருளுக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் ஆத்திரமடைந்த அருள் மனைவி சோனியாவை உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்து சடலத்தை சாக்குபையில் மூட்டை கட்டி அப்பகுதியில் உள்ள ஏரிக்கரை முட்புதரில் வீசியுள்ளார்.

வெளியேசென்ற இரண்டாவது மனைவி சூரியாவும் பிள்ளைகளும் வந்து கேட்டபோது கொலை செய்த விவரத்தை கூறியுள்ளார். இதையடுத்து இதுகுறித்து தகவல்அ றிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக பொன்னேரி காவல்ஆய்வாளர் பால்ராஜ் விசாரணை நடத்தி வருகின்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன் மற்றும் திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!