சென்னை அருகே இருசக்கர வாகன விபத்தில் பெண் உதவி ஆய்வாளர் பலி

9 Views

சென்னை: சென்னையில் பணியாற்றும் பெண் உதவி ஆய்வாளர் தாம்பரம் படப்பை அருகே சாலை விபத்தில் பலியானார். சென்னை காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவர் மாங்குயில் (32).

பூந்தமல்லி நீதிமன்றத்தில் கோர்ட் பணிகளை பூங்குயில் பார்த்து வந்துள்ளார். இன்று காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போது கணவரிடம் பூந்தமல்லி கோர்ட்டில் பணி உள்ளதாகக் கூறி கிளம்பியுள்ளார். இன்று மதியம் கிண்டியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் படப்பை தாண்டி மணிமங்களம் அருகே செரப்பனஞ்சேரி பேருந்து நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவர் வந்த இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி ஒன்று மோதியது. மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்தில்  வந்த பெண் உதவி ஆய்வாளர் மாங்குயில் லாரியின் முன்பக்க டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!