விபத்தில்லா மதுரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

8 Views

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்களால் “*விபத்தில் மரணமில்லா டிசம்பர்* ” என்னும் தீவிர சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் துவங்கப்பட்டுள்ளது.இந்த பிரச்சாரத்தின் நோக்கமானது, மதுரை மாநகருக்குள் சாலை விபத்தால் எந்த ஒரு உயிரும் இந்த டிசம்பர் மாதம் பழியாகக்கூடாது என்பதாகும்.மேலும் விழிப்புணர்வு பிரச்சாரம் அடங்கிய இணையதள பக்கம் ஒன்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்.

https://safemadurai.org

நாம் அனைவரும் ஒன்றுகூடி மதுரை மாநகரில் இந்த டிசம்பர் மாதத்தை விபத்தில்லா மரணமில்லா டிசம்பர் மாதமாக மாற்றுவோம்.

நேற்று மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் அனைத்து காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள், பாய்ஸ் கிளப் மாணவர்கள், நாட்டுநலத்திட்ட பணி மாணவர்கள் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்சிகள், தெருக்கூத்து நிகழ்சிகள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

மேலும் இந்த மாதம் முழுவதும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்சிகள் நடத்த காவல் ஆணையர் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!