மதுரையில் நிறைவாழ்வு (well being) பயிற்சி நிறைவு விழா

8 Views

மதுரை: மதுரை மாநகர காவலர்களின் மன அழுத்தத்தை போக்க கடந்த வாரம் (30.11.2018 முதல் 02.12.2018 வரை) மூன்று நாட்கள் நிறைவாழ்வு (well being) பயிற்சி முகாம் மதுரை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. நேற்று பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு.டேவிட்சன் ஆசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் கலந்துகொண்டு பயிற்சி முடித்த 160 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

மேலும் காவலர்களுக்கு மன அழுத்தம் நீங்க தினசரி உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகள் செய்து உடல் ஆரோக்கியத்துடன் பணியில் உற்சாகத்துடனும், நேர்மையாகவும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இப்பயிற்சி முகாமை திறம்பட நடத்திய சமூக ஆர்வலர் திருமதி. ஷர்மிளா, சிறப்பு நுண்ணிறிவு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.பாலசுப்பிரமணியம், C3 எஸ்.எஸ். காலனி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சரவண குமார் ஆகியோர்களை காவல் ஆணையர் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர் ஆயுதப்படை காவல் துணை ஆணையர் திரு.முருகேசன், ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் திரு.தண்டீஸ்வரன், மற்றும் காவல் ஆளிநர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிறை வாழ்வு பயிற்சி தொடர்ந்து வாரத்தின் மூன்று நாட்கள் (வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில்) நடைபெறும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!