மெரினாவில் காவல்துறையினர் கண்காணிப்பு தீவிரம், CCTV பணி தீவிரம்

13 Views

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் கடைகளை ஒழுங்குபடுத்தும் பணிகளை காவல் ஆணையர் விஸ்வநாதன், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகிய இருவரும் இணைந்து ஆய்வுசெய்தனர்.

கடற்கரையின் தூய்மை பாதிக்கப்படுவதோடு குற்றச்சம்பவங்கள் நடைபெற வாய்ப்பாக அமைந்துவிடுவதாகவும் புகார்கள் எழுந்தன. எனவே அவற்றை முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தும் பணியை காவல்துறையும் மாநகராட்சியும் இணைந்து கடந்த ஒருவாரமாக மேற்கொண்டன.

மெரினா கடற்கரையில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் ரோந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுவதுடன் சிசிடிவி கேமராக்களும் நிறுவப்படும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!