Sat. Feb 23rd, 2019

பொன்னேரி அருகே போதைப்பொருளுக்கு எதிராக மாணவர்கள் மாரத்தான் விழிப்புணர்வு, தமிழ்நாடு காவல் துறை பயிற்சி தலைவர் சாரங்கன் ஐபிஎஸ் துவக்கி வைத்து சிறப்புரை

பொன்னேரி அருகே போதைப்பொருளுக்கு எதிராக தனியார் கப்பல் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் மாரத்தான் விழிப்புணர்வு தமிழ்நாடு காவல் துறை பயிற்சி தலைவர் சாரங்கன் ஐபிஎஸ் துவக்கி வைத்து சிறப்புரை

செய்தியை பகிர்ந்து கொள்ள:
77 Views

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெரியபாளையத்தில் உள்ள பணப்பாக்கம் தனியார் கப்பல் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் போதை பொருட்களுக்கு எதிராக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.

இதில் கலந்து கொண்ட மாணவர்கள் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி போதைப் பொருட்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

முன்னதாக இந்த விழிப்புணர்வு மாரத்தான் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த தமிழ்நாடு காவல்துறை பயிற்சி தலைவர் சாரங்கன் ஐ பி எஸ் செய்தியாளரிடம் பேசுகையில், போதை பொருட்களுக்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி எடுத்து வருவதாகவும், தமிழகத்தை பொறுத்தவரை போதைப்பொருள் புழக்கம் குறைவாக உள்ளதாகவும், அதனை அறவே ஒழிக்க இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும் அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் மாணவர்களிடம் போதை குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கோடு தமிழக காவல்துறை தொடர்ந்து ஈடுபடும் என்றும் ஐஜி சாரங்கன் தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்த தமிழ்நாடு காவல்துறை பயிற்சி தலைவர் சாரங்கன் ஐ பி எஸ் அவர்கள் நினைவு மரக்கன்று நட்டு வைத்தார்.

மேலும் மக்கள் சமுதாயத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் எதிராக உலகளாகிய அளவில் எழுந்திருக்கும் பிரச்சனைதான் இந்த போதைப்பொருட்கள். போதைப் பொருட்களினால் தனிமனிதன், குடும்பம், சமுதாயம் என எல்லா வகைகளிலும் பாதிப்புகளே ஏற்படுகின்றன.

தன் சிந்தனையை போதையில் புதைத்து மன மயக்கத்தையும், குழப்பத்தையும் தன்னைத்தானே மனிதன் ஏற்படுத்திக் கொள்கின்றான். போதைப் பொருட்களில் மது, ஹெராயின், பெத்தனால் ஊசி, கஞ்சா, புகையிலை, பான் மசாலா, போதை தரும் இன்னும் பல வகைகள் அடங்கும்.

பள்ளிப் பருவத்திலோ அல்லது கல்லூரிகளிலோ படிக்கும் போது தீய நண்பர்களோடு ஏற்பட்ட பழக்கங்களினாலும் மற்றும் பொழுதுபோக்காகவும் பழகியக் கொண்ட பழக்கத்தை இன்று வரை விட்டு மீளமுடியவில்லை என வருத்தப்பட்டுக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

இத்தகைய போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களின் குடும்ப வாழ்க்கை, சமுதாய அந்தஸ்து, அலுவலக வேலை, நட்பு, உறவினர்கள் மற்றும் தொடர்புகள் என எல்லாவற்றிலும் விரிசல் ஏற்பட்டுவிடுகிறது. போதைக்கு அடிமையாகி இளமையிலேயே இறந்துவிடும் குடும்பத் தலைவனால் அக்குடும்பமே சிதைந்து சீரழிந்து விடுகின்றது. குழந்தைகளுக்கு அன்பு, அரவணைப்பு மற்றும் வழிகாட்டுதல் கிடைக்காமல் அவர்களின் எதிர்காலமும் கேள்விக் குறியாகிவிடுகின்றது.

இளம் வயதில் பழகிக் கொள்ளும் இத்தகைய போதைப் பழக்கங்கள் மெல்ல மெல்ல இவர்களை அடிமையாக்கி விடுகிறது. போதைப் பழக்கத்தினால் முதலில் பாதிப்படைவது மனிதனின் நரம்பு மண்டலம். மூளைக்குச் செல்லும் நரம்புகளைப் பாதித்து நினைவாற்றலை குறைக்கச் செய்கின்றது. இதன் காரணமாக சீரான இதயத்துடிப்பு பாதிக்கப்படுட்டு இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. உடலில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களினால் இதை உட்கொண்டவர்கள் மனதளவில் தன்னம்பிக்கை இழக்கிறார்கள். உடல் சோர்வடைதல், குற்ற உணர்ச்சி, தனிமையை நாடுவது போன்ற அவல நிலைக்கு உள்ளாகின்றார்கள்.

வாகனம் ஓட்டுபவர்கள் போதையைப் பயன்படுத்துவதால் கவனம் சிதைந்து விபத்துக்களுக்கு உள்ளாகி உயிர் இழப்புகளை ஏற்படுத்துவது. போதைப் பொருட்களினால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகள், சமுதாயம் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகள் என பலவகையான தீமைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

போதைக்கு எதிராக காவல்துறையினர் பல்வேறு மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தியது பாராட்டுதற்குரியது. இதில் பேராசிரியர்கள் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன் மற்றும் திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!