சிலைகடத்தல் பிரிவு நாயகன் ஐ.ஜி திரு.பொன்மாணிக்கவேல் நாளை முதல் பணி ஓய்வு

16 Views

சென்னை: ரயில்வே காவல்துறை மற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவில் நாயகனாக புகழப்படும் ஐஜி.திரு. பொன்.மாணிக்கவேல் நாளை ஒய்வு பெறுவதையொட்டி சென்னையில் பிரிவு உபச்சார விழா அயனாவரத்தில் நடைபெற்று வருகின்றது.

நாளையுடன் ஓய்வு பெறுவதை ஒட்டி பிரிவுசார விழாவில் ரயில்வே ஐஜி.பொன்.மாணிக்கவேல் அறிவுரை காவல்துறையினருக்கு கூறினார்.

பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும், உயர் அதிகாரிகளுக்காக காத்திருக்கக் கூடாது. ஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டவுடன் முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டுக்கு ஓடி விடுகிறார்கள். ஒரு வேளை ஜாமீன் கிடைக்கவில்லை என்றால் வேறு வழியில்லாமல் கைது செய்ய வேண்டியதாகி விடுகிறது.

வழிப்பறி குற்றங்களை கொள்ளை என்றே பதிவு செய்ய வேண்டும், இந்திய தண்டனை சட்டத்தில் வழிப்பறி என்று கிடையாது. நம் மண்ணுக்கேற்ற சட்டங்கள் இங்கு இல்லை

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளிடம் ரயில்வே காவல்துறையினர் வாக்குமூலம் வாங்கினால் செல்லும். வேலையில் இருக்கும் நல்லதுஇ கெட்டதுகளை ஏற்கும் மனநிலைக்கு ரயில் காவல்துறையினர் வர வேண்டும் என்று ஐ.ஜி திரு.பொன்மாணிக்கவேல் பேசினார்.

சிலை தடுப்பு பிரிவிற்கு இவர் ஆற்றிய பணி இன்றியமையாதது. இவருக்கு பணியில் வந்த சோதனைகளையும், தடைகளையும் சாதனைகளாக மாற்றிய நாயகன். இவருடைய பணி காலத்தினை நீட்டிக்க கோரிக்கைகள் ஏழுந்துள்ள நிலையில் பணி நீட்டிப்பு கிடைத்தால் இவருடைய சாதனைகள் தொடரும் என்பதில் ஐயமில்லை.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!