9 பவுன் செயினை திருடிய 3 பெண்கள் புகைப்படங்கள் வெளியிடு, தனிபடையினர் தீவிர தேடுதல் வேட்டை

13 Views

திருச்சி : திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவானைக்கோயில் பகுதியில் வசிக்கும் ஆண்டி என்பவரின் மனைவி திருமதி.மகாலெட்சுமி(70)என்பவர் திருப்பூரில் உள்ள தனது மகள் நிர்மலா என்பவரின் வீட்டிற்கு ரயிலில் செல்வதற்க்காக நேற்று முன்தினம் (25.11.2018) மதியம் 12.00 மணியளவில் திருவானைக்கோவில் செக்போஸ்ட் பஸ் ஸ்டாப்பில் டவுன் பஸ் ஏறி சத்திரம் பேருந்து நிலையம் வந்தார்.

அதன் பிறகு மத்திய பேருந்து நிலையம் செல்லும் டவுன் பஸ்சில் ஏறி சிங்காரத்தோப்பு பூம்புகார் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து கோட்டை ரயில் நிலையம் நோக்கி செல்வதற்காக ரோட்டை கடந்த போது அவரின் பின்னால் வந்த மூன்று பெண்கள் அவரிடம் நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு அவர் தான் திருப்பூர் செல்வதாக கூறியவரிடம் நாங்களும் ரயில் நிலையம்தான் செல்கிறோம் என்று கூறி அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி கொண்டு கோட்டை ரயில் நிலையம் செல்லாமல் திருச்சி ரயில்வே ஜங்ஷன் ஏறி செல்லலாம் என்று கூறி ரயில்வே ஜங்ஷனுக்கு அழைத்து சென்று உள்ளார்கள். பின்பு ஆட்டோ ரயில்வே ஜங்ஷன் வந்ததும் அவர்கள் மகாலெட்சிமியை இறக்கிவிட்டு அவர்களும் இறங்கி சென்று விட்டனர்.

பின்னர் மகாலெட்சுமி ரயில் நிலையம் சென்று திருப்பூருக்கு ரயில் டிக்கெட் எடுத்து கொண்டு ரயிலில் ஏறி உட்கார்ந்து ரயில் புறப்படும் போது அவர் கையில் வைத்திருந்த மணி பர்சை ஜாக்கெட்டில் வைப்பதற்காக பார்த்த போது அவர் தனது கழுத்தில் அணிந்திருந்த சுமார் 9 பவுன் தாலி செயினை காணாததால் கோட்டை காவல் நிலையம் வந்து கொடுத்த புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் முனைவர்.திரு.அ.அமல்ராஜ் இ.கா.ப. அவர்களின் உத்தரவுபடி தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை துவங்கியது.

இவ்வழக்கு சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டதில் மூன்று பெண்கள் மகாலெட்சுமியை பின்தொடர்ந்து வந்தது உறுதி செய்த காவல்துறையினர் அந்த மூன்று பெண்களின் புகைப்படத்தை வைத்து அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

மேலும் மேற்படி புகைப்படத்திலுள்ள பெண்களை பற்றி தகவல் தெரிந்தாhல் திருச்சி மாநகர நுண்ணறிவுப்பிரிவு தொலைபேசி எண் 0431-2331939ரூகைப்பேசி எண்.94981-00615.மற்றும் கோட்டை குற்றபிரிவு காவல் நிலைய தொலைபேசி எண். 0431-2717832.மற்றும் காவல் ஆய்வாளர் கைபேசி எண்.9442062981 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

தனியே செல்லும் வயதான பெண்கள் தங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!