தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் கோவையில் கைது: நகைகள், கார் மீட்பு

8 Views

கோவை: கோவையில் நடைபெற்ற திருட்டு வழக்கு தொடர்பாக வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 41) காவல்துறையினர் தேடி வந்தனர். கோவை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் கடந்த மாதம் காஞ்சீபுரம் காவல்துறையினர் திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.

அப்போது அவரிடம் இருந்து ஒரு கிலோ தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த 3ஆம் தேதி ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தான்.

இதை அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்ய முடிவு செய்தனர். கேரளாவில் இருந்து கோவை வழியாக சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டன் காரில் தப்பி சென்ற போது பெருந்துறையில் காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.

பின்னர் மணிகண்டன் கோவை தனிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டான். பின்னர் அவரை கைது செய்து கோவை தெற்கு பகுதி உதவி ஆணையர் திரு.சோமசுந்தரம்இ குனியமுத்தூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.அமுதா மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கோவை வெள்ளலூர், குனியமுத்தூர், கோவைப்புதூர், வடவள்ளி, செட்டிப்பாளையம் உள்பட பல்வேறு வீடுகளில் புகுந்து தொடர்ந்து திருடியது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில் 17 பவுன் தங்க நகைஇ 3 கிலோ வெள்ளி பொருட்கள், 2 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மணிகண்டனுக்கு உதவியாக இருந்த அவரது கூட்டாளி அருண்குமார் (25) என்பவரும் கைது செய்யப்பட்டார். கைதான மணிகண்டன், அருண்குமார் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மற்றொரு கூட்டாளியான கோபிநாத் என்பவரை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!