15 பெண்களிடம் செயின் பறித்த கொள்ளையன் கைது ரூ. 18 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு

15 Views

திருச்சி: திருச்சி மாநகர பகுதிகளில் குற்ற சம்பவங்கள் அதிகமாக நடைப்பெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில் திருடர்களை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு. அமல்ராஜ் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் தனிப்படையினர் 20.11.2018-ம் தேதியன்று காலை 11.30 மணிக்கு ஸ்ரீரங்கம், மேலூர் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்த முற்பட்ட போது தப்பிக்க முற்பட்ட அவரை பிடித்து விசாரிக்க திருச்சியை சேர்ந்த பிராங்கிளின் குமார் என்றும்¸ மேலும் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் திருச்சி மாநகர பல்வேறு பகுதிகளில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுப்பட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்டு கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் எதிரியை கைது செய்து¸ அவரிடமிருந்து ரூ.18¸00¸000 மதிப்புள்ள 60 பவுன் நகைகள்¸ பணம் மற்றும் இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேற்படி வழிப்பறி திருட்டில் ஈடுபட்டு 15 வழக்குகளில் சம்மந்தப்பட்ட நபரை கைது செய்த தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!