நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா சார்பில் கஜா புயல் நிவாரணம்

16 Views

வேலூர்: கஜா புயலில் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா (Newsmedia Association of India) மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் தினமின்னிதழ்  வேலூர் மாவட்டம் கும்பினிப் பேட்டை குடியுரிமை நிருபர் இளைஞர் குழு மூலமாக நிவாரண பொருட்கள் வேலூர் மாவட்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, தமிழ் நாடு மாநில தலைவர் (ஒளிபரப்பு ஊடக பிரிவு) திரு.பாபு அவர்கள் வேலூர் மாவட்ட கும்பினிப் பேட்டை குடியுரிமை நிருபர் இளைஞர் குழுவுடன் இணைந்து அத்தியாவசிய பொருட்களான அரிசி, பெட்சீட், போர்வை, துண்டு, மெழுகுவர்த்தி, பால் பவுடர், பிஸ்கட், தீப்பெட்டி போன்ற பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிவாரண பொருட்களை ஏற்பாடு செய்த தமிழ் நாடு மாநில தலைவர் (ஒளிபரப்பு ஊடக பிரிவு) திரு.பாபு அவர்கள் வேலூர் மாவட்ட பகுதியில் சிறந்த முறையில் சமூக பணியாற்றும் சமூக சேவகர் ஆவார். மேலும் அவர் வேலூர் மாவட்ட காவல்துறையினரின் நற்செய்திகளை வெளி உலகிற்கு அளித்து வரும் போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர் ஆவார். புயல் , வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் வரும் போது இவர் கரம் முன்னோடியாக நிற்கும் இவரை நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் மாநில தலைவராக கொள்வதில் பெருமையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். இவருடைய சமூக பணி மேலும் சிறக்க நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

முன்னதாகவே 7 மாவட்டங்களிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. நம் சங்கத்திலுள்ள ஒவ்வொரு குடியுரிமை நிருபர்களும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றோம்.

இதற்கான முழு ஏற்பாடுகளை நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா வேலூர் மாவட்ட நிர்வாகிகளுக்கும் நன்றிகள் பல.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!