கண்காணிப்பு கேமிரா அவசியம் குறித்து மீஞ்சூர் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் விழிப்புணர்வு

24 Views

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியில் தொடர் கொள்ளை, செயின் பறிப்பு, வீடுகளில் திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறுவதால் அதை தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் பொன்னேரி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ராஜா அறிவுரையின் பேரில் மீஞ்சூர் காவல் துறை ஆய்வாளர் திரு.ராஜ்குமார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்கினார்.

மீஞ்சூர் காவல் துறை ஆய்வாளர் திரு.ராஜ்குமார் பேசுகையில், கண்காணிப்பு கேமராக்கள் மீஞ்சூரின் பாதுகாப்புக்கு அவசியம். குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நடந்த குற்றங்களில் குற்றவாளிகளைக் கைது செய்யவும் கண்காணிப்பு கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன.

பல குற்றச் சம்பவங்கள், அசம்பாவிதங்கள், வாகன விபத்துகள் மற்றும் வன்முறை சம்பவங்களின்போது உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்கு கண்காணிப்பு கேமரா காட்சிகள் பெரிதும் உதவுகின்றன.

பின்னர் பஸ்நிலையம் அருகில் கேமிராக்கள் பொருத்தப்பட்டது. இதில் கேசவபுரம் குடியிருப்போர் நல சங்க தலைவர் முத்துகுமார், துணைத்தலைவர் டில்லி, செயலாளர் சுந்தரமூர்த்தி, துணை செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் மாரியப்பன் மற்றும் கேசவபுரம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன் மற்றும் திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!