சாலையில் கிடந்த 32 பவுன் நகையை காவல்துறையினரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

21 Views

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம்¸ உடுமலைபேட்டையை சேர்ந்தவர் சரவணன் குடும்பத்துடன் 12.11.2018 ம் தேதியன்று உறவினர் இல்லத் திருமணத்துக்கு காரில் சென்று விட்டு வீடு திரும்பும் போது காரை நிறுத்தி உடன்வந்த உறவினர்களை இறக்கி விட்டார் அப்போது நகைப்பை சாலையில் தவறி விழுந்துவிட்டது.

பின்னர் இது குறித்து உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர் அப்போது அவர்களிடம் முழு விவரம் கேட்கப்பட்டது பிறகு திகைப்பூட்டும் விதமாக அவர்கள் தொலைத்த நகைப்பையை போலீசார் ஒப்படைத்தனர்.

அதைக் கண்டதும் அந்த தம்பதி வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தனர். இது குறித்து காவல் ஆய்வாளர் திரு. ஓம்பிரகாஷ் அவர்கள் கூறுகையில் ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் என்பவர் சாலையில் கிடந்த பையை எடுத்துவந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் சாலையில் கிடந்த நகைகளை எடுத்து வந்து நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டனுக்கு காவல் ஆய்வாளர் பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!