காஜ புயல் மீட்பு பணிகளுக்காக ஈரோட்டில் இருந்து 144 காவலர்கள் அனுப்பி வைப்பு

ஈரோடு: காஜ புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திகணேசன் உத்தரவின் பேரில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு ஈரோட்டில் இருந்து 144 காவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
காஜ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் வினியோகம், போக்குவரத்து, குடிநிர் எதுவும் முறையாக மக்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசுக்கு எதிராக சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புயல் பாதித்த பகுதிகளில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க தமிழக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் காவலர்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டும் என அரசு சார்பில் உத்தரவிடப்டடது.
இதன் அடிப்படையில் நேற்று காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சுப்பையா தலைமையிலான 90 காவலர்கள் திருவாரூர் மாவட்டத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதே போல் நாகப்பட்டினம் பகுதிக்கும் சூராம்பட்டி காவல் ஆய்வாளர் திரு.ராஜகுமார் தலைமையில் 54 காவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பாதுக்காப்பு பணிக்கு சென்ற காவலர்களுக்கு உணவுகள் சமைப்பதற்கான பொருட்களும் உடன் எடுத்து சென்றனர்.