தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு எஸ்.பி பாராட்டி வெகுமதி

21 Views

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, தலைமையில் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வுக்கூட்டத்தின்போது, தாமிரபரணி மஹாபுஷ்கர விழா, குலசேகரப்பட்டிணம் தசரா முத்தாரம்மன் கோவில் திருவிழா மற்றும் திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா ஆகிய பாதுகாப்பு மற்றும் இதர அலுவல்களில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுமதியளித்து பாராட்டினார்கள்.

இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, தலைமையில் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வுக்கூட்டத்தில்; 11.10.2018 முதல் 24.10.2018 வரை நடை பெற்ற தாமிரபரணி மஹா புஷ்கர விழாவில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு படித்துறைகளில் மொத்தம் சுமார் 10,50,000 பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர். அதில் முறப்பநாடு படித்துறையில் மட்டும் 8 லட்சம் பக்தர்களும் குலசேகரப்பட்டிணம் தசரா திருவிழா 10.10.2018 முதல் 20.10.2018 வரை நடைபெற்ற திருவிழாவில் சுமார் 7,25,000 பக்தர்களும் திருச்செந்தூர் கந்ச சஷ்டி திருவிழா 08.11.2018 முதல் 13.11.2018 வரை நடைபெற்ற திருவிழாவில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

மேற்கண்ட விழாக்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறை ஆளினர்கள் அனைவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா பாராட்டினார்கள். மேற்கண்ட பாதுகாப்பு பணியின்போது இரவு- பகல் என்று பாராமல் மிகச்சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி நிலமோசடி தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது, சார்பு ஆய்வாளர் முருகன், மஹா புஷ்கர விழாவின் போது சிறப்பாக பணியாற்றிய முறப்பநாடு தனிப்பிரிவு தலைமை காவலர் ஜெகநாதன், முறப்பநாடு காவலர் மாரியப்பன், ஸ்ரீவைகுண்டம் பெண் தலைமை காவலர் ராஜேஸ்வரி, காவலர் திருவரங்கசெல்வி ஆகியோரையும்,

கந்த சஷ்டி திருவிழாவின் போது சிறப்பாக செயல்பட்ட புதுக்கோட்டை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் வேலாயுத பெருமாள் என்பவரையும், சிப்காட் காவல் நிலைய 6 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கடத்தல் வழக்கில் எதிரிகளை கைது செய்தும், 46 லட்சம் மதிப்புள்ள முந்திரிக்கொட்டை வழக்கில் எதிரிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து அவற்றை பறிமுதல் செய்தும், சிறப்பாக செயல்பட்ட சிப்காட் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முத்து கணேஷ் என்பவரையும், முத்தையாபுரம் கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்த திருச்செந்தூர் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் என்பவரையும், மதுரை மாவட்ட வாகன விபத்து வழக்கில் ஈடுபட்ட எதிரியை கைது செய்த மத்திய பாகம் காவல் நிலைய காவலர் உதயகுமார் என்பவரையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா, வெகுமதியளித்து பாராட்டினார்கள்.

இந்த மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் பிரகாஷ், தூத்துக்குடி ஊரகம் முத்தமிழ், ஸ்ரீவைகுண்டம் சகாயஜோஸ், சாத்தான்குளம் பாலச்சந்திரன், திருச்செந்தூர் தீபு, விளாத்திக்குளம் தர்மலிங்கம், கோவில்பட்டி ஜெபராஜ், மணியாச்சி ரவிச்சந்திரன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் முகேஷ் ஜெயக்குமார், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் பங்கு பெற்றனர்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!